சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் தங்கம் விலை கிட்டத்தட்ட 3160 ரூபாய் வரையில் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் இன்று நிலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,17,680 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14710 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16047 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,28,376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
