தமிழகத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருக்கும் நிலையில் பல கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது ஆதரவை கொடுப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இன்னும் தங்களுடைய முடிவை அறிவிக்காத நிலையில் அவர்களும் ஆதரவு கொடுத்தால் 118 என்ற பெரும்பான்மை கிடைத்து விடும். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தில் கம்யூனிஸ்ட் கொள்கைகள் மற்றும் சித்தாந்தம் போன்றவைகள் இடம் பெற்றிருந்ததாகவும் அப்போதே இதனை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இரு கட்சிகளும் ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் பங்கு கேட்டுள்ள நிலையில் தற்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவையில் பங்கு வேண்டாம் என்றும் வெளியிலிருந்து மட்டும் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றும் அறிவித்துள்ளனர்.
