இங்கிலாந்தின் லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பிசினஸ் ஜெட் விமானம் புறப்பட்டு  மேலே பறக்கும்  முயற்சியிலேயே  விபத்துக்குள்ளானது. விபத்தால், மேகத்தை விழுங்கும் அளவுக்கு கருமையான புகை  மண்டலமாக காட்சியளித்து  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீச் B200 சூப்பர் கிங் எயர் எனும் சிறிய விமானம் நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் நோக்கி புறப்பட இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

விபத்துக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், விமானம் வெடித்து எரியும் காட்சிகள் காணப்பட்டன.  போலீசார், கூறியதாவது,  “சுமார் 12 மீட்டர் நீளமுள்ள ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதாக சற்று முன்னர் தகவல் கிடைத்தது. மீட்பு மற்றும் விசாரணை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து உள்ளூர் எம்பி டேவிட் பர்‌டன்-சாம்ப்சனும் வருத்தம்  தெரிவித்துக் கொண்டார்.

“>

 

விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர், உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற விவரங்கள் தற்போது உறுதி செய்யப்படவில்லை. , சம்பவ இடத்திற்கு நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஓர் ஏரிய ரெஸ்பான்ஸ் யூனிட், மூன்று மூத்த பராமரிப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பப்பட்டன.

விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்த்தனர். விமான பாதுகாப்பு மற்றும் விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து மீட்பு பணி செய்துவருகின்றனர்.