தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக விடுமுறை தொடங்குகிறது. ஏற்கனவே 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த நாள் முதல் கோடை விடுமுறை அமலுக்கு வருகிறது. விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1-ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
