தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. கட்சியை பலப்படுத்த சுமார் 100 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க முடிவு எடுத்துள்ள விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் பிறகு ஏப்ரலில் மதுரையில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துகிறார். இதனால் அவர் தென் தமிழகத்தை குறிவைத்து களமிறங்குவதாக கூறப்படுகிறது.