உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் நிலையில் திரிவேணி சங்கமத்தில் இதுவரை கோடிக்கணக்கானோர் புனித நீராடியுள்ளனர். இன்று தை அமாவாசை என்பதால் அதிகாலை முதலே மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு லட்சக்கணக்கான பயணிகள் குவிந்து வருகிறார்கள். இதனால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு 15 பேர் உயிரிழந்துவிட்டனர். அதன்பிறகு பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருவதால் அங்கு தற்காலிகமாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் தற்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்டு அங்கிருந்த பணியாளர்கள் தீயை அணைத்தனர். மேலும் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
