பொதுவாக திருமண விழாவின்போது சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது திருமணத்தில் மணமகனே அர்ச்சகராக மாறி வேத மந்திரங்களை ஓதியுள்ளார். ஹரித்துவார் பகுதியில் விவேக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதலில் ஊர்வலமாக வந்து திருமணத்தில் கலந்து கொள்கிறார். அவர் மணமேடைக்கு வந்த பிறகு திருமண சடங்குகளை செய்ய ஆரம்பிக்கிறார்.
தன்னுடைய திருமணத்தில் மணமகள் அருகில் இருக்கும் போது வேத மந்திரங்களை ஓதி சடங்குகளை செய்தார். அதாவது விவேக் 12-ம் வகுப்பு முடித்த பிறகு வேத படிப்பை படித்துள்ளார். மேலும் அதனால் தான் தன்னுடைய திருமணத்தில் அவரே மந்திரங்களை ஓதியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Groom Becomes Priest: #Saharanpur Man Conducts His Own Wedding Rituals pic.twitter.com/keHAABXD77
— Genzdigest (@Genzofficia_l) January 25, 2025
