உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த 13ஆம் தேதி மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் மொத்தம் 46 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அதாவது 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து நீராடுவார்கள். இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் நீராடியுள்ள நிலையில் இன்று தை அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்கள் ஏராளம். இந்த நாளில் புனித நீராடினால் மிகவும் யோகம் என்று கூறப்படுவதால் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் தை அமாவாசையை முன்னிட்டு புனித நீராடா குவிந்ததால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது அங்கு துரிதமாக நடைபெற்று வருவதால் தற்போது மகா கும்பமேளாவில் நீராடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடந்து முடிந்த பிறகு மீண்டும் புனித நீராடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
