தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் மிகவும் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும் பதிலளித்திருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது.
இருப்பினும், சட்டமன்ற விவாதங்களுக்கு அங்கேயே பதிலளித்து அந்தப் பிரச்சினையை முடிக்காமல், வீட்டிற்குச் சென்ற பிறகு அறிக்கை வாயிலாக தனது கோபத்தை வெளிப்படுத்துவது ஒரு முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கை அல்ல என்று எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் முகம்மது முபாரக் விமர்சித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் கனிவான போக்கைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் முதல்வர், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்துவிட்டு இன்னும் பெருந்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
