பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் முற்றிலும் சட்டப்பூர்வமானது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
“மாநிலத்தில் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதை உறுதி செய்யும் நோக்கத்திலேயே உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் செயல்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டதே.”
இந்த அதிரடி தீர்ப்பின் மூலம் பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகளுக்கு இருந்த சட்டச் சிக்கல்கள் நீங்கியுள்ளன. மேலும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பாக சார் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பீகார் மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
