நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த கஸ்தூரி சமீபத்தில் பாஜகவில் இணைய போகிறார் என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில், அண்ணாமலை தலைமையில் நடந்த காக்கிச்சட்டை பேரணியில் அவர் கலந்து கொண்டார். கௌதமி, காயத்ரி ஆகியோர் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது கஸ்தூரி ஐக்கியமாகியுள்ளார்.