மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த ரவுடி மற்றும் சரித்திர குற்றவாளியான சிவமணி, தன்னைச் சுற்றி இருந்த ரவுடிகளை அடிக்கடி இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவரது கூட்டாளிகள், அவரை தீர்க்கும் திட்டம் தீட்டினர். திட்டத்தின் படி, சிவமணியை சுற்றுலா என்ற பெயரில் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு போதையில் இருந்த சிவமணியை, காருக்குள் அமர வைத்தபடியே திட்டமிட்டபடி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான தகவல் போலீசாருக்கு கிடைத்ததையடுத்து, கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.