புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மூத்த தலைவரும் காங். வேட்பாளருமான வைத்திலிங்கம் மயங்கி விழுந்தார். ஜீவா நகர் பகுதியில், திறந்தவெளி ஜீப்பில் நின்று பிரசாரம் செய்த போது, வெயில் தாக்கம் காரணமாக திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே பிரசார வாகனத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அருகே இருந்த வீட்டில் ஓய்வெடுக்க வைத்தனர். அதனைத்தொடர்ந்து, முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.