நாடு முழுவதும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய விருதுகள் வழங்கப்படும் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான 71 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக பார்க்கிங் தேர்வாகியுள்ள நிலையில் சிறந்த திரைக்கதைக்காக பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தேசிய விருது பெறுகிறார். அதன்பிறகு சிறந்த துணை நடிகருக்காக பார்க்கிங் திரைப்படத்திற்காக நடிகர் பாஸ்கருக்கு தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது.
