
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் கடந்த மே பத்தாம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. குந்தபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரண் குமார் கோட்கி, காங்கிரஸ் மற்றும் மஜத வேட்பாளர்களை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். பாஜக பின்னடைவை சந்தித்தாலும் முதல் வெற்றியை பதிவு செய்ததால் கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.