தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழகம் கிட்டத்தட்ட 108 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது. ஆனால் இன்னும் ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு பத்து இடங்கள் தேவைப்படுகிறது.
இதனால் விஜய் யாரிடம் ஆதரவு கூறப்போகிறார் என்று எதிர்பார்ப்போ அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தமிழக வெற்றிக்கழகத்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது 5938 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ. கடற்கரைராஜ் 5,938 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நயினார் நாகேந்திரன், 2026 தேர்தலில் சாத்தூர் தொகுதிக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
