தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படக்குழு சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிடக் கூடாது என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பராசக்தி படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் இருக்கும் நிலையில் தற்போது தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக நாளை பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
