தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படக்குழு சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிடக் கூடாது என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை உலகம் முழுவதும் உள்ள ஹிந்தி திணிப்புக்கு எதிராக உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.