தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கோட்டையைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக அவதரித்துள்ள தவெக-வின் தலைவர் விஜய், இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரியுள்ளார்.
தவெக வசம் 108 இடங்கள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தையும் சேர்த்து மொத்தம் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு அவர் இந்த உரிமை கோரல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
ஆளுநருடனான இந்தச் சந்திப்பின்போது, நாளை (மே 7) காலை (11:30) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் முதலமைச்சராகப் பதவியேற்க அனுமதிக்குமாறும், பெரும்பான்மையை நிரூபிக்கத் தனக்கு 2 வாரக் கால அவகாசம் வழங்குமாறும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும் நிலையில், மீதமுள்ள இடங்களைச் சரிக்கட்டிப் பெரும்பான்மையை அசத்தலாக நிரூபிக்கலாம் என்ற அசாத்திய நம்பிக்கையில் தவெக தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருவதால், நாளை தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் அரியணை ஏறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
