தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆஜரான நிலையில் நடிகர் விஜயின் டெல்லி சென்று இரண்டு நாட்கள் விசாரணைக்கு ஆஜர் ஆனார். இந்த நிலையில் நாளை மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாளை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற இருக்கும் நிலையில் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என திடீரென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜனநாயகன் திரைப்படத்தை இன்று சென்சார் நிர்வாகம் மறு ஆய்வு செய்வதாக இருந்த நிலையில் ஒரு அதிகாரிக்கு உடல்நலம் சரியில்லாததால் இன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
