தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகளிர் தின மேடையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், “அது Worth இல்லை” என்று விஜய் குறிப்பிட்டதை ரஞ்சனா நாச்சியார் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு அரசியல் தலைவர் பயன்படுத்தும் இத்தகைய வார்த்தைகள், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது குடும்பப் பிரச்சனைகளை கையாள்வதிலும், மனைவியின் உரிமையை மதிப்பதிலும் தலைவர் கண்ணியம் காக்க வேண்டும். தனிப்பட்ட ஒழுக்கமே ஒரு தலைவனை அடையாளம் காட்டும். தலைவரின் பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள், இன்றைய இளைஞர்களிடையே (Gen-Z) தவறான முன்னுதாரணங்களை விதைப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள், தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலே காரணம் என அவர் குறிப்பிடுகிறார்.
துயரத்தில் உள்ள மக்களைச் சந்திக்கத் தகுந்த இடங்களுக்குச் செல்லாமல், அவர்களைத் தன்னிடம் வரவழைத்ததைக் குறிப்பிட்டு, இது தமிழர் பண்பாடு அல்ல என்று அவர் விமர்சித்துள்ளார். வீரமங்கை வேலுநாச்சியாரைக் கொள்கைத் தலைவராக முன்னிறுத்தும் விஜய், பெண்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும், மேடையில் முழங்கும் பெண்ணியம் அவரது அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “பிறக்கும் குழந்தைகளுக்குச் சீர் செய்வதை விட, இருக்கும் இளைஞர்களின் ஒழுக்கத்தைச் சீர்குலைக்காமல் இருப்பது தலைவருக்கு அழகு” என்று அவர் சாடியுள்ளார்.
ஒரு வளர்ந்து வரும் அரசியல் இயக்கம், தலைவரின் செயல்பாடுகளால் தேய்ந்துவிடக் கூடாது என்று எச்சரித்துள்ள ரஞ்சனா நாச்சியார், மோசமான ‘ட்ரெண்ட் செட்டராக’ மாறாமல், இளைஞர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீங்கள் வொர்த் இல்லை என்று கூறியது உங்கள் மனைவியயையா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா என்று கேள்வி எழுப்பிய அவர் நான் விமர்சித்ததால் என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் கவலைப்பட மாட்டேன் என்றார். மேலும் தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகு என்னுடைய சொந்த பணிகளை கவனிப்பேன் மீண்டும் கூறினார்.
