ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தை, இணையத்தில் மற்றும் கேபிள் டிவி வாயிலாக வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி, 36 இணைய சேவை நிறுவனங்களுக்கும் 5 கேபிள் டிவி நிறுவனங்களுக்கும் எதிராக சன் பிக்சர்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘கூலி’ திரைப்படத்தை எந்தவிதத்திலும் இணையதளங்கள், OTT, கேபிள் டிவி அல்லது பிற ஊடகங்கள் வழியாக வெளியிடக் கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
