மத்திய அரசு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை இன்று அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 5 பேருக்கு பத்மவிபூஷன் விருதுகளும், 13 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரியைச் சேர்ந்த குறும்பா ஓவியர் ஆர் கிருஷ்ணா, திருவாரூர் மிருதங்க கலைஞர் பக்தவச்சலம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெண்கல சிற்பக் கலைஞர் ராஜேஷ்பதி காளியப்ப கவுண்டர், தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன், திருத்தணியை சேர்ந்த ஓதுவார் சுவாமிநாதன் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் கே பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ரோகித் சர்மா மற்றும் ஹர்மன் பிரீத் கபூர், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி ஆகியோருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்ம விருதுகளை வென்றவர்களின் முழு பட்டியல் இதோ,
#PadmaAwards 2026 announced: 131 awardees honoured, including 5 Padma Vibhushan, 13 Padma Bhushan, and 113 Padma Shri, recognising excellence and service across diverse fields.#PadmaAwards2026 #PeoplesPadma pic.twitter.com/iuhyldgeSE
— DD News (@DDNewslive) January 25, 2026
