தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரை நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 86. மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரின் மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.