திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (செப்.10) காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை  பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் காலாண்டுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என மாவட்ட கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.