
சென்னையில் சமீப காலமாகவே தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. அதாவது வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை தொடர்ந்து உயர்வை சந்திக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் சந்தைகளில் இருந்து 250 டன் தேங்காய் கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில வாரங்களாகவே 70 டன் மட்டும் தான் கொண்டுவரப்படுகிறது.
இதன் காரணமாகத்தான் தேங்காய் விலை பல மடங்கு உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ சில்லறை விற்பனையில் 30 முதல் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவது இல்லதரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.