சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 95200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 12938 ரூபாய்க்கும், ஒரு சவரன் 103504 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 207 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 207000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
