தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் குஷ்பூ தான் தேசிய மகளிர் அணி செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.