‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் இன்று (ஆகஸ்ட் 24) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கோர சென்னை வந்தார். சுதர்சன் ரெட்டி வருகையால் சென்னை அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.

மாலை நேரத்தில் சுதர்சன் ரெட்டி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தன்னுடைய வேட்பாளருக்கு தமிழகத்தின் முழுமையான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பில் திமுகவின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவு தொடர்பான முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திப்பு முடிந்ததும், சுதர்சன் ரெட்டி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இருவரும் ஒன்றாகச் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. துணை குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்தச் சந்திப்பு, தேசிய அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெறக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது.