திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் பொன்முடி. திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக  சட்டப்பேரவை செயலாளர்  தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் எழுதியது. சட்டப் பேரவை அலுவலகம் கடிதம் அளித்துள்ள நிலையில், விரைவில் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கக்கோரி அதிமுகவினர் அண்மையில் மனு அளித்திருந்தனர்.