தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் பல கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அந்த கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
