தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் திமுக கட்சி உறுப்பினராகவும் இருப்பவர் போஸ் வெங்கட். இவருக்கு தற்போது அந்த கட்சியின் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது திமுகவின் கலை, இலக்கிய மற்றும் பகுத்தறிவு துணை பேரவை தலைவராக போஸ் வெங்கட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த பொறுப்பில் இருந்த எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கல்வியாளர் அணி செயலாளருக்கு மாற்றப்பட்டதால் தற்போது திமுகவின் கலை, இலக்கியம் மற்றும் பகுத்தறிவு பேரவை துணைத் தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த புதிய பொறுப்புக்காக நடிகர் போஸ் வெங்கட் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி  ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில் அடுத்து வரும் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என கூறியுள்ளார்.