தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தனித்து செயல்பட்டு வந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்த ஓபிஎஸ் அதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்த நிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அவர் அதிமுகவில் மீண்டும் இணைய பல முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்காததால் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

மேலும் அவருடன் எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் அவரது மகனும் முன்னால் எமிபியுமான ரவீந்திரநாத் ஆகியோரம் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களுடைய ஆதரவாளர்களும் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்த நிலையில் தற்போது இது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.