தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழக வெற்றிக்கழகத்தினர் வரலாறு காணாத அளவில் பல இடங்களை கைப்பற்றிய கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல தொகுதிகளை அந்த கட்சியின் வேட்பாளர்கள் கைப்பற்றி வெற்றி வாகை சூடி உள்ளன.

சென்னையில் மட்டுமே அனைத்து தொகுதிகளையும் தமிழக வெற்றிக்கழகம் கைப்பற்றும்  நிலையில் இருக்கும் நிலையில் ஆர்கே நகர், மயிலாப்பூர், திருவிக நகர், ராயபுரம் என பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெற்றி வாகை சூடிய நிலையில் தற்போது தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.