தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த அறிமுக கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டு தன்னுடைய கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். அதேநேரம் தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் என்கிறார்கள்.
ஆனால் இது மக்களுக்கான அறிமுக கூட்டம். தமிழகத்தில் எத்தனை முனை போட்டி நடைபெற்றாலும் திமுக மற்றும் தமிழக கட்சி கழகம் இடையே தான் போட்டி என்றார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அந்த கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
