மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பினார். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வந்தபோது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய், ஒரு கட்டத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்; உடனடியாகப் பாதுகாப்புப் படையினர் அவரை மீட்டு காரில் அனுப்பி வைத்தனர். எனினும், விமான நிலையத்திலிருந்து அவர் கிளம்பிய போது, பின்னால் வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக விஜய்யின் கார் மீது மோதியது.
<a href=”http://
விபத்தில் சிக்கிய விஜய்யின் கார்.!#Vijay #VijayCar #Chennai #VijayChennaiReturn #VijayViralVideo #VijayFansCrowd #JanaNayaganAudioLaunch #Malaysia #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/LeKtAm8Qge
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) December 28, 2025
“>
இதில் விஜய்யின் காரின் இண்டிகேட்டர் லைட் உடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவங்களால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
