
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் பெரம்பூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு காலை முதல் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது, ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் தேசிய கட்சியின் மாநில தலைவர் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை இருக்கும்போது சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறினார்.