நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே இரண்டாம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நள்ளிரவு ஒரு மணி அளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
