தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த முறை அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்த 11 வது தோல்வி இது என்பதால் கட்சிக்குள் தற்போது உட்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிவி சண்முகம் தலைமையிலான 26 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தனர். அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறிய நிலையில் கொறோடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதே நேரத்தில் எஸ்பி வேலுமணியை சட்டசபை குழு தலைவராக நியமிக்க வேண்டும் என 26 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் 22 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று 26 எம்எல்ஏக்களின் கட்சி பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி பரித்த நிலையில் அதற்கு பதிலாக புதிய உறுப்பினர்களையும் நியமித்தார். இதனை தொடர்ந்து இன்று மேலும் இருவரது கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி திருத்தணி எம்எல்ஏ கோ. அரியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக கடலூர் மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயனும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் இன்று சபாநாயகரை இபிஎஸ் தரப்பு மற்றும் சிவி சண்முகம் தலைமையிலான தரப்பு என இரு பிரிவினரும் நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.