தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சி அமைந்த விவகாரத்தில், தற்போது அடுத்த அதிரடி திருப்பமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆளுநர் மாளிகையை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ளது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களை வளைக்கத் தமிழக வெற்றிக் கழகம் ‘குதிரை பேரம்’ நடத்தியுள்ளதாக இபிஎஸ் தரப்பு மிகக் கடுமையான புகாரை முன்வைத்துள்ளது. இந்த ஜனநாயக விரோதச் செயல் குறித்து விரிவான புகார் மனுவை அளிக்கவும், தவெக அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு நேரம் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக – திமுக மோதலுக்கு மத்தியில், அதிமுகவும் தற்போது நேரடியாகக் களமிறங்கியிருப்பது கோட்டை வட்டாரத்தில் நிலவும் அரசியல் அனலை இன்னும் அதிகரித்துள்ளது.
