தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 பணம் வழங்கப்பட்டது. இதேபோன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. நேற்றைய சட்டசபை கூட்டத்தொடரின் போது கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கியமான நலத்திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடரும் என்று முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன்  திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் தமிழக அரசு சார்பில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.