தமிழகத்தின் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் 45 நாட்களில் நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக ரேஷன் கார்டு மற்றும் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் அவர்களின் கோரிக்கைகள் 45 நாட்களுக்குள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொடர்ந்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னையில் முதற்கட்டமாக தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறும்.
ஒரு வட்டாரத்திற்கு ஒரு முகாம் என 388 வட்டாரங்களில் மொத்தம் 1164 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் இதயம் அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவர்கள் பங்கேற்பார்கள் எனவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
