சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 73200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9981 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79848 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 123 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 123000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.