தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் என்ற 28 வயதான ஐடி ஊழியர் நெல்லையில் காதல் விவகாரத்தில் ஆவண படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் போலீசில் எஸ்ஐ யாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களது மகன் சுர்ஜீத் என்பவர் தான் கவினை நெல்லையில் வைத்து விரட்டி விரட்டி படுகொலை செய்தார்.

இந்த வாலிபரை போலீசார் கைது செய்த நிலையில் பெண்ணின் பெற்றோர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்ததோடு அவரின் தந்தையை கைது செய்தனர். அதே நேரத்தில் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மகனின் சடலத்தை வாங்க இதுவரை மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கவினின் சடலத்தை வாங்குவதற்கு தற்போது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது நிலை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு இன்றே இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.