தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பொறுபேற்றுக்கொண்டார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் அதிமுக மற்றும் திமுக இல்லாத ஒரு புதிய கட்சி இன்று பதவியேற்றுள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வராக பதவியேற்றதும் இரண்டு மாதத்திற்கு 200 எனில் மின்சாரம் இலவசம் சிங்கப்பெண்கள் சிறப்பு படை மற்றும் போதை ஒழிப்பு படை ஆகிய மூன்று முக்கிய திட்டங்களில் முதலமைச்சர் விஜய் கையெழுத்து போட்டார். அதன் பிறகு மேடையில் பேசிய அவர் மக்களுடன் செல்பி எடுத்தார். அப்போது தனக்கு முன்னாள் இருந்த மேஜையை நகர்த்துவதற்காக உதவியாளர்களுக்கு விஜய் உதவி செய்தார். மேலும் முதலமைச்சர் ஆன பிறகு யாரும் செய்யத் துணியாத ஒரு விஷயத்தை மிகவும் எளிமையாக விஜய் செய்தது தற்போது மிகவும் வியப்பாக பேசப்படுகிறது
Annovv…Ena na panra 😂 pic.twitter.com/Ve0S8Ut4G2
— Maddy Madhav (@MaddyMadhav_) May 10, 2026
