தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், இன்று மதியம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு முதன்முறையாக வருகை தந்து தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

கோட்டைக்கு வருகை தந்த அவருக்குத் தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்த நிலையில், வழிநெடுகிலும் திரண்டிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர்.

தனது அறைக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியைத் தொடங்கினார்.  சினிமாவில் இருந்து கோட்டைக்கு ஒரு ‘மாஸ்’ எண்ட்ரி கொடுத்துள்ள விஜய்யின் இந்த வருகை, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.