தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது தவெக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் ஆரம்பத்திலேயே ‘கறார்’ வார்னிங் கொடுத்து அதிரடி காட்டியுள்ளார்.
பதவியேற்பு விழாவிற்குப் பிறகு உரையாற்றிய அவர், “நாம பதவிக்கு வந்துட்டோம், இனி எது வேண்டுமானாலும் செய்யலாம், ஆட்டம் போடலாம் என யாராவது நினைத்திருந்தால், தயவுசெய்து அந்த எண்ணத்தை இப்போதே உங்கள் மனதில் இருந்து அழித்துவிடுங்கள்” என்று மிகக் கடுமையான தொனியில் எச்சரித்தார்.
அதிகார மமதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையோ அல்லது தவறான செயல்களில் ஈடுபடுவதையோ தனது அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை முதல்வர் விஜய் இந்த ஒற்றை வரியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கத் துடிக்கும் அவர், தனது கட்சியினர் தரையிறங்கி வேலை செய்ய வேண்டுமே தவிர, அதிகார போதையில் ஆட்டம் போடக்கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதை இந்த எச்சரிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
