கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒண்டி புதூரை சேர்ந்த பிரணவ், அதே பகுதியில் பெண் தோழி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது பேரரசு என்ற 17 வயது சிறுவன் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சூலூர் போலீசில் பேரரசு சரண் அடைந்த நிலையில் காதல் விவகாரமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.