தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மூலமாக மக்களுக்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வார இறுதி விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள், தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் போன்ற நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மூலமாக ‘நவகிரக சிறப்பு பேருந்து’ சேவை வரும் 24ம் தேதி முதல் தொடங்குகிறது.

சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் இப்பேருந்து இயக்கப்படும். காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்படும் இப்பேருந்து, நவகிரக கோயில்கள் அனைத்திற்கும் பயணிகளை அழைத்துச் சென்ற பின், மாலை 6 மணிக்கு மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும். இதற்கு பயண கட்டணமாக ரூ‌.750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஎன்எஸ்டிசி (TNSTC) செயலியில் முன்பதிவு செய்யலாம்