
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அதன்படி தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் அதிமுக, பாஜக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகள் இதுவரை எந்த இடங்களையும் பெறவில்லை.